கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Update: 2023-04-18 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வி.மருதூர் பாரதியார் தெரு பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கையில் உருட்டுக்கட்டையுடன் நின்றுகொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் பிரச்சினை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை இன்ஸ்பெக்டர் காமராஜ் தட்டிக்கேட்டபோது அந்த நபர், இன்ஸ்பெக்டரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர், விழுப்புரம் கே.கே. சாலை வில்லியம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மோகன் என்கிற குள்ளமோகன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்