சேகரிப்பு மையத்தில் 531 காலி பாட்டில்களை கொடுத்த நபர்
நெல்லை டவுனில் உள்ள சேகரிப்பு மையத்தில் நபர் ஒருவர் 531 காலி பாட்டில்களை கொடுத்து பணம் பெற்றார்.
நெல்லை மாநகராட்சி மூலம், பொதுமக்கள் ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.1 பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து 23-3-2023 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை டவுன் தொண்டர் சன்னதி பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டது. அங்கு நேற்று வரை 50 ஆயிரத்து 559 காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் பெறப்பட்டு உள்ளது. .அதற்கு உரிய தொகை ரூ.50 ஆயிரத்து 559 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நேற்று சுகாதார அலுவலர் இளங்கோவிடம் ஒரு நபர் 531 பாட்டில்களை ெகாடுத்து பணம் பெற்று சென்றார். இன்னொருவர் 26 பாட்டில்கள் கொடுத்து சென்றார்.