கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது;

Update:2023-09-29 01:06 IST

கருங்கல், 

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ்(வயது48), காண்டிராக்டர். கடந்த 2018-ம் ஆண்டு பிரான்சிஸ் தனது மகளை ஒரு கும்பல் கேலி செய்த விவகாரத்தில் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், அவர் வீட்டுக்கு சென்றபோது செல்லங்கோணம் பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சுபி என்பவர் மீது கருங்கல் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் சுபி கேரளாவில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவில் பதுங்கி இருந்த சுபியை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்