வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது;

Update:2022-08-26 23:20 IST

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையை அடுத்த அரமங்காடு வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சூரியமூர்த்தி (வயது27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமார் (54) என்பவருக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் சொத்து பிரச்சினை குறித்து 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் (21) ஆகிய இருவரும் சேர்ந்து சூரியமூர்த்தியை கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சூரியமூர்த்தி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் தொடர்புடைய தினேஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்