வக்கீலை தாக்கியவர் கைது

வீரவநல்லூரில் வக்கீலை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-29 20:03 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிரியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). வக்கீலான இவர் புதுக்குடி மெயின் ரோட்டில் உள்ள புதுக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் (37) என்பவருடைய ஓட்டலில் சாப்பிட்டு வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் கிருஷ்ணன், ஓட்டலுக்கு சாப்பிட சென்று புரோட்டா ஆர்டர் செய்தார். ஆனால் அவர் புரோட்டா இல்லை என கூறிவிட்டு வேறு ஒருவருக்கு புரோட்டா கொடுத்தார். அதற்கு கிருஷ்ணன் என்னிடம் புரோட்டா இல்லை என கூறிவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களே என கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் உள்பட 3 பேர் சேர்ந்து கிருஷ்ணனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணன் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிந்து, மாரியப்பனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்