மின்சாரம் தாக்கி மயில் செத்தது

பெண்ணாடம் அருகே மின்சாரம் தாக்கி மயில் செத்தது தேசியக்கொடி போர்த்தி போலீசார் மரியாதை

Update: 2023-05-12 18:45 GMT

பெண்ணாடம்

பெண்ணாடம் செம்பேரி, சவுந்தர சோழபுரம், பொன்னேரி, சிலிப்பனூர் ஆகிய கிராமங்களின் அருகாமையில் உள்ள வெள்ளாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை பெண்ணாடத்தில் இருந்து செம்பேரி செல்லும் சாலையில் மின்மாற்றியில் சிக்கிய மயில் ஒன்று மின்சாரம் தாக்கி செத்து கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் செத்து கிடந்த மயிலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து விருத்தாசலம் கோட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனக்காப்பாளர் செல்வபாண்டியன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் வனக்காப்பாளர் செல்வபாண்டியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் மின்சாரம் சிக்கி உயிரிழந்த மயிலின் மீது தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். பின்னர் இந்த மயிலை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்