சேதம் அடைந்த நிலையில் ஊராட்சி அலுவலகம்

சேதம் அடைந்த நிலையில் ஊராட்சி அலுவலகம் காணப்படுகிறது.;

Update:2023-08-30 00:45 IST

முத்துப்பேட்டை அருகே தோலி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் தோலி சேவை மைய கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே சேதம் அடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அலுவலகம் செயல்படும் கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய அலுவலகம் ்விரைந்து கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்