'சீல்' வைக்கப்பட்ட கடையை திறந்து விற்பனை செய்த உரிமையாளர் கைது

‘சீல்’ வைக்கப்பட்ட கடையை திறந்து விற்பனை செய்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 23:09 GMT

திருச்சி நவல்பட்டு ரோடு, திருவெறும்பூர் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் கடந்த 4-ந்தேதி அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கடையின் பின்புறம் வழியாக வியாபாரம் செய்வதாக மாவட்ட நியமன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் கடையை ஆய்வு செய்த போது, வியாபாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் குத்தூஸ் மீது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குத்தூசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்