தாயை கிண்டல் செய்தவருக்கு கத்திக்குத்து

தாயை கிண்டல் செய்தவரை கத்தியால் குத்திய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-04 18:53 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளி குப்பத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவரது கணவர் இறந்துவிட்டார். மகேஷ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை அதே ஊர் காலனி பகுதியை சேர்ந்த கலியுகன் (32) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மகேஷ் தனது மகன் பாண்டு என்கிற மோகன்தாசிடம் (23) கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கலியுகனை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்