ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சாவு

வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-03-30 17:12 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் புதிய பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்