தமிழக அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் - திருமாவளவன்

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

Update: 2022-11-21 16:11 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் உள்ள கட்சி பிரமுகர் இல்ல விழாவுக்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரமுடியாது.

கால்பந்து வீராங்கனை இறந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தமிழக அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

வந்தவாசி கீழ்கொடுங்காலூர், கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் அந்தந்த போலீஸ் நிலையங்கள் முன்பு வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் திருமாவளவனை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் நேரில் சந்தித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்