கைத்தறி ரகத்தை விசைத்தறியில்தயாரித்த முதியவர் கைது

குமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் தயாரித்த முதியவரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2023-09-15 18:35 GMT

பள்ளிபாளையம்

குமாரபாளையம் பகுதியில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் ஓட்டுவதாக திருச்செங்கோடு கைத்தறி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கைத்தறி ரக சட்ட உதவி அமலாக்க அலுவலர் ஜெயவேல் கணேசன் குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது எல்.வி.பி. சந்து பகுதியில் மனோகரன் (வயது 68) என்பவரின் விசைத்தறி கூடத்தில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் ஓட்டுவது தெரிய வந்தது. இதையடுத்து அமலாக்க அலுவலர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் மனோகரன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்