கண்மாயில் மூழ்கி முதியவர் சாவு

கண்மாயில் மூழ்கி முதியவர் பலியானார்.

Update: 2022-07-03 19:11 GMT

அரிமளம் ஒன்றியம், தேனத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 80). இவர் தனது வீடு அருகே உள்ள கண்மாயின் மறுபுறத்தில் உள்ள தைலமரக்காட்டில் விறகு எடுப்பதற்காக கண்மாய்க்குள் இறங்கி சென்று உள்ளார். கண்மாய் குறுக்கே சென்று விறகு குச்சிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் கண்மாய்க்குள் இறங்கி வீட்டிற்கு வரும் பொழுது கால் தடுக்கி தண்ணீரில் விழுந்து மூழ்கினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்