புதுச்சத்திரம் அருகே பள்ளி வேன் மோதி முதியவர் பலி

புதுச்சத்திரம் அருகே பள்ளி வேன் மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-06-13 18:45 GMT

புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் கருப்புடையார் (வயது 87). விவசாயி. இவர் நேற்று காலை பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக முதியவர் கருப்புடையார் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருப்புடையார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்