கார் மோதி முதியவர் சாவு
கந்தம்பாளையம் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள மேல் சாத்தம்பூர் முருக கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 70). இவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் வசந்தபுரம் கடைவீதிக்கு சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜு இறந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.