முதியவர் பலி; 5 பேர் படுகாயம்

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2022-08-12 18:57 GMT

திருச்சுழி,

திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 63). இவரது மருமகள் வெளிநாடு சென்றார். ஆதலால் அவரை வழி அனுப்புவதற்காக சுப்புராஜ் தனது உறவினர்களுடன் காரில் மதுரைக்கு சென்றார். காரை ரெட்டியாபட்டி சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டினார். மதுரைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்ப வந்து கொண்டு இருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்து மரத்தின் மீது கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த சுப்புராஜ் அவரது உறவினர்கள் விஜயலட்சுமி, பராசக்தி, சரண்யா, நியான், கணேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த சுப்புராஜை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ம.ரெட்டியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்