கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது.

Update: 2022-07-12 18:54 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 10 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு தற்போது 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்