சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..!
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அலகாபாத், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த விவேக் குமார் சிங், எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை ஐகோர்ட்டில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.