நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் -அமைச்சர் கே.என்.நேரு தகவல்

150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Update: 2023-03-31 00:07 GMT

சென்னை,

ஶ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் உள்பட சில பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், கோரிக்கைகள் வந்து கொண்டுள்ளன.

சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் நடைபெற்று கொண்டிருக்கும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை 2023-ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும், நெம்மேலிக்கு அருகிலுள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாடு

ஆலந்தூர் பகுதியில் ரூ.127 கோடி மதிப்பீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.53 கோடி மதிப்பீட்டிலும், கே.கே நகரில் ரூ.46 கோடி மதிப்பீட்டிலும், குறைபாடுகள் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

சாலைகள் மேம்பாடு

2022-23-ம் ஆண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி

உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்

5,909 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

சென்னை மாநகரில் தற்போது, ரூ.135 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வில்லிவாக்கம் மேம்பாலம், ஸ்டீபன்சன் சாலை பாலம் மற்றும் தி.நகர் ஆகாய நடைபாதை ஆகியன முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர, தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலை மேம்பாலம் ரூ.131 கோடியிலும், கணேசபுரம் சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடியில் மேம்பாலமும், மணலி சாலையில் ஏற்கனவே உள்ள ரெயில்வே சந்திக்கடவு 2பி-க்கு மாற்றாக

ரூ.96 கோடியில் மேம்பாலமும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

விக்டோரியா பொது மண்டபம்

வடசென்னையில் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி மற்றும் தென்சென்னையில் கோவளம் வடிநிலப்பகுதியில் எஞ்சியுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும்

135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகரில் உள்ள விக்டோரியா பொது மண்டபம் அதன் பழைய தொன்மை மாறாமல் புத்துயிர் பெறும் வகையில் ரூ.33 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்