நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும்

நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-19 19:19 GMT

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து (வண்டி எண் 06030) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து (வண்டி எண் 06029) திங்கட்கிழமை இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லைக்கு வருகிறது.

இந்த ரெயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து இந்த ரெயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் கல்லிடைக்குறிச்சியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் போது இரவு 7.31 மணிக்கு வந்து 7.32 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் போது கல்லிடைக்குறிச்சிக்கு காலை 5.51 மணிக்கு வந்து 5.52 மணிக்கு நெல்லைக்கு புறப்படும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்