கோவிலுக்கு சீர் கொடுத்த முஸ்லிம்கள்
எஸ்.புதூர் அருகே கோவிலுக்கு முஸ்லிம்கள் சீர் கொடுத்தனர்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள வஞ்சினிகருப்பர் கோவிலில் படையல் திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு கரிசல்பட்டி ஜமாத்தார்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, ஜமாத்தார்கள் பள்ளிவாசலில் இருந்து தேங்காய், பழம், இனிப்பு என சீர் எடுத்து கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் சார்பாக அவர்களுக்கு வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து வஞ்சினி கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஆண்டு தோறும் கலந்து கொள்ளும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.