பாய் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்

பாய் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகும் அபாயம்

Update: 2022-09-30 20:13 GMT

கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழையால் பாய் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழுகி வரும் பாய் நாற்றங்கால்

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்துள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கும்பகோணத்தில் ஒரு சில பகுதிகளில் வயலில் சாகுபடி செய்வதற்காக பாய் நாற்றங்காைல விவசாயிகள் அமைத்துள்ளனர். இந்த மழையால் பாய் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகி வருகிறது.

உரிய நிவாரணம்

வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் வளர்ந்துள்ள நாற்றுகளை தற்போது நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாற்றங்கால் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்