செல்போன் பறித்து விட்டு தப்ப முயன்றவர் கைது

செல்போன் பறித்து விட்டு தப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-28 18:45 GMT

அடுக்கம்பாறை


செல்போன் பறித்து விட்டு தப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கணியம்பாடி அடுத்த பங்களத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கணியம்பாடி, ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்ற கோழி என்பவர், கார்த்திக்கை வழிமடக்கி அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். உடனே கார்த்திக் கூச்சலிட, அங்கிருந்தவர்கள் ரமேஷ்பாபுவை மடக்கிப்பிடித்து வேலூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்‌. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ்பாபுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்