வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-30 20:29 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவருக்கும், 18 வயதான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று தெற்கு பாப்பான்குளம் மெயின் ரோடு பகுதியில் நின்ற சதீஷை அந்த வாலிபர் அவதூறாக பேசி, அரிவாளால் வெட்ட முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்