பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
வந்தவாசி அருகே பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கன்னிகாபுரம் வாசுகி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). இவர் வந்தவாசியை அடுத்த தேத்துறை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த திங்கள்கிழமை கோழிக்கறி வாங்க வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச் சாலையில் உள்ள குரும்பூரை சேர்ந்த மாலா நடத்தும் கோழிக்கறி கடைக்கு சென்றுள்ளார்.
அவர் சென்றபின் கத்தியைக் காணவில்லையே என்று உரிமையாளர் மாலா கத்தியைத் தேடிக்கொண்டிருந்தர். இந்த நிலையில் சீனிவாசன், அந்த வழியாக சென்றவர்களை கோழிக்கறி கடையிலிருந்து எடுத்துச்சென்ற கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களை அவதூறாக பேசியுள்ளார்.
இது குறித்து கோழி இறைச்சி கடை உரிமையாளர் மாலா வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.