இரும்பு கம்பிகளை திருடியவர் கைது

இரும்பு கம்பிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-15 17:18 GMT

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58). இவர் கட்டியாவயல் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக இரும்பு கம்பிகளை வாங்கி வீட்டின் முன்பு போட்டுள்ளார். இந்த நிலையில் 250 கிலோ எடையிலான இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடிக்கொண்டு சரக்கு வேனில் ஏற்றி தப்ப முயன்றனர். அப்போது அந்த வழியாக திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து வந்தனர். சரக்கு வேனை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அருகில் சென்று விசாரித்த போது 3 பேர் தப்பியோடினர். ஒருவர் மட்டும் நின்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர், அதே பகுதியை சேர்ந்த பாண்டி (30) என்பதும், இரும்பு கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாண்டியை போலீசார் கைது செய்தனர். திருடிய இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மாதேஷ், ஹரிஹரன், ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்