மாமனாரை கத்தியால் குத்தியவர் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-23 19:34 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கூட்டாம்புளி மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 29). இவருடைய மனைவி ஜெனிபர். முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜெனிபர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விக்கிரமசிங்கபுரம் அருணாசலபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் முருகன், அருணாசலபுரத்தில் உள்ள மாமனார் ஜான்சன் (52) வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜான்சன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்