சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் அருகே வன்னிவயல் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் 10 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்த கிராமத்தினர் சந்தேகம் அடைந்து சிறுமியை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமியிடம் விசாரித்த போது அந்த ஆசாமி, சிறுமியை அவரது வீட்டிற்கும் மேற்கண்ட காட்டுப் பகுதிக்கும் அடிக்கடி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து கிராமத்தினர் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் சைடு லைன் அமைப்பினர் சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர். இதில் தனசேகரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.