அனுமதியின்றி சரவெடி தயாரித்தவர் கைது

அனுமதியின்றி சரவெடி தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-31 18:57 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரகோட்டையில் ஒரு பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்றது. ஆனால் இந்த பட்டாசு ஆலையில் அனுமதியின்றி பேன்சி ரகவெடிகள் தயாரிப்பதாக ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் ஆகியோரின் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்து கொண்டிருந்த அச்சங்குளத்தை சேர்ந்த போர்மேன் ஜெகன்குமார் (வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கீழச்செல்லையாபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சரவெடிகள் முழுமை அடையாத 4 பெட்டிகளும், முழுமை அடைந்த சரவெடிகள் இருந்த ஒரு பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்