வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

வாலிபரை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-27 13:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா ஹரிஹரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது 28). இவர், அப்துல்லாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.

அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்.ஜி.ஆர். சட்டை பையில் இருந்த ரூ.500 பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.ஜி.ஆர்., திருடன்.. திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர் காஞ்சீபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் (19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்