வாலிபரை பிளேடால் வெட்டியவர் கைது

வாலிபரை பிளேடால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-16 21:34 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள குத்துக்கல் நடுத்தெருவை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த சீதாராமன் (50) என்பவரும் உறவினர்கள் ஆவர்.

நேற்று முகேஷ்குமாரின் தாயாரை சீதாராமன் கிண்டலாக பேசிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட முகேஷ்குமார் ஏன் இப்படி சத்தம் போட்டு பேசுகிறீர்கள் என தட்டி கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த சீதாராமன், அவதூறாக பேசி கையில் வைத்திருந்த பிளேடால் முகேஷ் குமாரை வெட்டினார். இதில் காயம் அடைந்த முகேஷ் குமார் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சொரிமுத்து பாண்டியன் வழக்கு பதிவு செய்து சீதாராமனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்