பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-11 18:43 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் மனைவி ராணி (வயது47), இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (50) என்பவர் முன்விரோதம் காரணமாக அவரை தரைக்குறைவாக திட்டியும் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராணி புகார் கொடுத்தார். அன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்