கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கந்திலி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
கந்திலி அருகே உள்ள ஜெயபுரத்தில் முருகன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலின் உண்டியலை ஒருவர் உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து கந்திலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெள்ளநாயக்கனேரியை சேர்ந்த மோகன் (வயது 38) என்பதும், கோவிலில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 712 ரூபாயை பறிமுதல் செய்தனர்.