முதியவரை தாக்கியவர் கைது

கடலூர் அருகே முதியவரை தாக்கியவர் கைது

Update: 2023-06-21 18:45 GMT

கடலூர் முதுநகர்

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலை ரோடு, சின்னையன் காலனியை சேர்ந்தவர் மணி(வயது 83). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(45) என்பவர் மணியின் வீட்டின் பின்புறம் இருந்த மோட்டாரை கழற்றுவது போல் அமர்ந்து இருந்தார். இதை மணி தட்டிக்கேட்டபோது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மணியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்