லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
போடியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாள் கோவில் அருகே கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் 21 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 50) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.