லாரியின் டயர் வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு

லாரியின் டயர் வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-10 19:09 GMT

சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரிடம் லாரி டிரைவராக அதே ஊரைச் சேர்ந்த பாரதிதாசன் (வயது 33) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றார். பின்னர் மீண்டும் சி.ஆர்.பாளையத்துக்கு ஓட்டி வந்தார். லாரி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள கரியமாணிக்கம் பிரிவு ரோடு அருகே வந்தபோது, திடீரென்று லாரியின் டயர் வெடித்தது. தொடர்ந்து லாரியிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர்த்தப்பினார். அடுத்த சில நிமிடங்களில் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முத்துக்குமாரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்துஅணைத்தனர். எனினும் இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மேலே உயர் அழுத்த மின்கம்பிகள் சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்துறை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்