2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 63). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், முருகம்மாள் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த விஜி (25), சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த அவினாஷ் (21) ஆகியோர் முருகம்மாளிடம் நகையை பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் 2 பேரும் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். இதையடுத்து விஜி, அவினாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.