கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது
கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை மேலப்பாளையம் காட்டுபத்து தெருவை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன் (வயது 38). இவருடைய நண்பர் சிவா என்ற பரமசிவன். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மேலநத்தம் ரெயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மேலப்பாளையம் சிவராஜபுரத்தை சேர்ந்த ராஜப்பா (32) என்பவர் திடீரென்று வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் காஜா நிஜாமுதீன் சட்டை பையில் இருந்து ரூ.200 பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பாவை கைது செய்தனர்.