செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணி தீவிரம்

சிவகாசியின் நீர் ஆதாரமாக இருந்த செங்குளம் கண்மாய் கழவுகளால் நிரம்பி வழிந்த நிலையில் அதனை பசுமை மன்றம் தூர் வாரும் பணியை தொடங்கி உள்ளது.

Update: 2022-10-11 19:05 GMT

சிவகாசி, 

சிவகாசியின் நீர் ஆதாரமாக இருந்த செங்குளம் கண்மாய் கழவுகளால் நிரம்பி வழிந்த நிலையில் அதனை பசுமை மன்றம் தூர் வாரும் பணியை தொடங்கி உள்ளது.

நீர் ஆதாரம்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் பெரியகுளம், சிறுகுளம், செங்குளம் கண்மாய்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கண்மாய்களில் நீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் கண்மாய்களுக்கு நீர் வருவது குறைந்ததால் கண்மாய் தண்ணீர் இன்றி மைதானம் போல் காட்சி அளித்தது. அதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியகுளம், சிறுகுளம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் பாதையில் இருந்த அடைப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் பெய்த கனமழையின் போது பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்கள் நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்தது.

செங்குளம்

இந்தநிலையில் சுமார் 66 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வந்தது. இதனை சரி செய்து மழைநீரை தேக்க பசுமை மன்றம் முடிவு செய்து அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றது. இதனை தொடர்ந்து பூமி பூஜையுடன் செங்குளம் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கியது.

இதுகுறித்து பசுமை மன்றத்தை சேர்ந்த ரவி அருணாச்சலம் கூறியதாவது:- ஆனையூர் கண்மாய் நிரம்பி செங்குளம் கண்மாய்க்கு மழைநீர் வருவது வழக்கம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்பட்டதாலும் மழை நீர் செங்குளம் வருவது தடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டது. தற்போது தண்ணீர் எளிதில் வருகிறது.

நடவடிக்கை

செங்குளம் கண்மாயில் 6 ஏக்கர் தனியாக பிரித்து கழிவுநீர் தேக்கி வைக்கவும், மற்ற பகுதியில் மழைநீர் சேமித்து வைக்கவும் தேவையான நடவடிக்கைகள் ரூ.50 லட்சம் செலவில் முதல்கட்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த பணி நடைபெற்று வருகிறது. இங்கு கழிவுகள் கொட்டாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்