விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

விக்கிரமசிங்கபுரத்தில்விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.

Update: 2022-11-19 20:27 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் முப்புடாதி அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோபால் (வயது 43). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது பாபநாசத்தில் இருந்து அம்பை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் கோபால் படுகாயம் அடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த அயன் சிங்கப்பட்டியைச் சேர்ந்த பூதப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்