விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Update: 2022-08-29 20:59 GMT

குழித்துறை:

குழித்துறை அருகே குறுமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெலஸ்டின் (வயது 46). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு என்ற பகுதியை சென்றடைந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள் ஜெலஸ்டினின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெலஸ்டின் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்