விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
நெல்லை அருகே விபத்தில் காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் முருகேசன் (வயது 38). டிரைவர். இவர் கடந்த மாதம் 28-ந்தேதி நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ஆற்றுப்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.