மின்கசிவால் வீடு எரிந்து நாசம்

மின்கசிவால் வீடு எரிந்து நாசமானது.

Update: 2022-12-24 19:19 GMT

ஆவுடையார்கோவில் அருகே பூவலூர் வடவயல் கிராமத்தை சேர்ந்தவர் சோனமுத்து (வயது 40). மின் கசிவு காரணமாக இவரது ஓட்டு வீட்டில் தீப்பிடித்தது. இதில், தீமளமளவென பரவியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் வைத்திருந்த பொருட்கள், சான்றிதழ்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்