மழைக்கு வீடு இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

ஆண்டிப்பட்டி அருகே மழைக்கு வீடு இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2022-11-04 18:45 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா கோவில்பட்டி அருகே உள்ள மாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்தேவர் மனைவி மாயக்காள் (வயது 75). இவர் கடந்த 2-ந்தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிவாரணம் வழங்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி, மாயக்காளின் வாரிசான மூக்கையாவின் வங்கி கணக்கு விவரங்களை வருவாய்த்துறையினர் பெற்றனர். அந்த வங்கிக் கணக்கில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நேற்று செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்