பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-21 18:45 GMT

ஊட்டி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகையை ஏந்தியவாறு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எளிப்பினர்.

இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 20 ஆண்டுகளாக பணி நிறைவு செய்த சாலை பணியாளர்களுக்கு சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் ஒட்டுமொத்த முதுநிலை பட்டியல் வெளியிடப்படாமல், முறைகேடாக வழங்கப்படும் பதவி உயர்வு நடைமுறையை கைவிட்டு, தமிழ்நாடு சார்நிலை பணி அடைப்பு அடிப்படையில் முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும்.

பராமரிப்பு பணிகள்

வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளான சாலை பணியாளரின் நிலை குறித்து எதுவும் கேட்டு அறியாத உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோரை கண்டிக்கிறோம். சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்குரிய மண்வெட்டி, சட்டி, கம்பூஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

அதேபோல் சாலை பணியாளர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவரும் சங்க நிர்வாகிகளை அவமதிக்கக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் குணபாண்டியன், செந்தில்நாதன், ராமமூர்த்தி, ஜெயராமன், முருகன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்