அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்; பழனி நாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை

தென்காசி தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

Update: 2023-08-14 18:45 GMT

சுரண்டை:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் யூனியன் ஊத்துமலையில் பழுதடைந்துள்ள அரசு கிராம சித்த மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும். ஊத்துமலை மற்றும் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். மேலும் சுரண்டை நகராட்சியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெறும் வகையில் விபத்து நேரத்தில் அவசர சிகிச்சை கிடைக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பான மகப்பேறு சிகிச்சை கிடைக்கவும் சுரண்டை நகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அல்லாத மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் கூறியது போல் தென்காசி மாவட்டத்தில் அடுத்த ஆண்டில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்