அரசு பஸ் கவிழ்ந்தது

அரசு பஸ் கவிழ்ந்தது

Update: 2022-10-02 18:45 GMT

துடியலூர்

கோவையில் இருந்து ஆனைக்கட்டி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் ஆனைக்கட்டி ஆலமரமேடு ஆசிரமம் அருகில் நேற்று காலை 7 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை சின்னியம்பாளையம் தனம்நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 40) ஓட்டிச் சென்றார். கிணத்துக்கடவு சொக்க னூரை சேர்ந்த சாமி என்பவரின் மகன் ஆறுச்சாமி (47) கண்டக்ட ராக இருந்தார். அந்த பஸ்சில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் டிரைவர் கார்த்திகேயன் அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற போது திடீரென்று ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பஸ்சை டிரைவரால் சரியாக இயக்க முடியாத நிலையில் நடுரோட்டில் பஸ் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சல் போட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இது குறித்து சின்னத்தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்