பாசன வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி

கொள்ளிடம் அருகே பாசன வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2022-11-13 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே பாசன வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

வாய்க்காலில் விழுந்த சிறுமி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமன். தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள். இதில் 2-வது மகள் ஹர்ஷிதா (வயது6). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு பின்புறம் உள்ள பாசன வாய்க்காலில் ஹர்ஷிதா தவறி விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாள்.

உடல் கண்டெடுப்பு

இதையடுத்து அவளுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஹர்ஷிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவள் தண்ணீரில் மூழ்கி இறந்தது ெதரியவந்தது. வாய்க்காலின் ஓரத்தில் ஹர்ஷிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொள்ளிடம் போலீசார் ஹர்ஷிதாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுமி வாய்க்காலில் மூழ்கி இறந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நிதி உதவி

குழந்தை இறந்தது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அங்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்