மதிய உணவுக்கு தோசை சுட்டதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
மதிய உணவுக்கு தோசை சுட்டதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.
தேன்கனிக்கோட்டை:
மதிய உணவுக்கு தோசை சுட்டதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது.
அஞ்செட்டியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பெண்
அஞ்செட்டி மராத்தி தெருவில் வசித்து வருபவர் வீரபத்திரய்யா, இவர் வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சவுபாக்கியா (வயது 28).
நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக வீரபத்திரய்யா வீட்டிற்கு வந்தார். அப்போது சவுபாக்கியா மதிய உணவுக்கு தோசை சுட்டு வைத்திருந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதனை வீரபத்திரய்யா கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வீரபத்திரய்யா மீண்டும் வேலைக்கு சென்று விட்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சவுபாக்கியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஓசூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினர். சவுபாக்கியாவுக்கு 5 வயதில் ஒரு மகனும், 1½ வயதில் ஒரு மகளும் உள்ளனர்.