கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-06-15 21:24 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்து

ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் வஷீர் முகமது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பற்றிய தீ சமையலறையில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் பரவியது.

இதற்கிடையே சிலிண்டர் மேல் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு கியாஸ் முழுவதுமாக வெளியேறியது.

அப்போது குடும்பத்தினர் அனைவரும் அருகில் உள்ள அறையில் இருந்தனர். சமையலறையில் இருந்து புகை வருவதை அறிந்த வஷீர் முகமது மற்றும் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொருட்கள் எரிந்து நாசம்

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா்.

இருப்பினும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து நடந்த போது அருகே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்